நகர்வெழுத்து

செம்மொழி இலக்கிய, இலக்கண நூல்களின் ஆய்வகம், உலகப் பேரறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்ற நூல்களின் பதிப்பகம்
output:

திங்கள், 21 அக்டோபர், 2013

முனைவர் ஆ.மணி எழுதிய நூல்கள் - விவரங்களும் உள்ளடக்கமும்

தமிழன்னை ஆய்வக வெளியீடுகள்
தொடர்புக்கு : 94439 27141.
முனைவர் ஆ.மணி எழுதிய நூல்கள் - விவரங்களும் உள்ளடக்கமும்

குறுந்தொகைத் திறனுரைகள் (பக்கம்: 112. விலை:ரூ.30) – உள்ளடக்கம்:

1. தி.சௌ.அரங்கனாரின் குறுந்தொகை உரைத்திறன்
2. குறுந்தொகை : குறுகிய பாடல்களின் தொகைதானா?
3. குறுந்தொகைப்  பதிப்பு வரலாறு
4. குறுந்தொகைத்   திணை  வேறுபாடுகள்
5. உள்ளுறையும் சமுதாயச் சீர்திருத்த விழுமியமும்
6. கள்வனா?   களவனா?
7. குறுந்தொகையில் போரியல் செய்திகள்
8. சோ.அருணாசலதேசிகரின் குறுந்தொகைப் பதிப்புநெறிகள்
9. கூதளி -செடியா? கொடியா? மரமா?
11. ஔவை, வெள்ளிவீதி அகப்பாடல்கள்
12. குறுந்தொகைப்  பாடவேறுபாடுகள்
13. குறுந்தொகையின் பல்துறை ஆளுமை
14. குறுந்தொகை - முதல் தொகை நூலா?
15. கூந்தலுக்கு மணம் உண்டா?

செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள் (பக்கம்: 144. விலை:ரூ.70) – உள்ளடக்கம்:

1.  சொல்லியமுறை – திணைவரிசை முறையா?                
2.   கோட்பாட்டு நோக்கில் தொல்காப்பியரின் கைக்கிளைத்    தலைவி                     
3. தொல்காப்பியக் களவுக்கால மெய்ப்பாடுகளும் உடல்மொழியும்                          
4. தொல்காப்பியப் பாடவேறுபாடுகள் (எழுத்ததிகாரம்,சொல்லதிகாரம்)                      
5.  தொல்காப்பியக் கருத்தியல் புலப்பாட்டு நெறிகள்                                             6.   குறுந்தொகை 27 ஆம் பாடலின் ஆசிரியர் யார்?                                                                                                   
7.சிலப்பதிகார வழக்குகளும் இன்றைய நீதிமன்ற நடைமுறைகளும்                               8.   சிலப்பதிகாரப் பாண்டியன் இறைமுறை பிழைத்தோனா?                                                                                             9.   கானல்வரி ஆய்வுகளும் மீளாய்வும்       

குறுந்தொகை உரைநெறிகள் (பக்கம்: 304. விலை:ரூ.300) – உள்ளடக்கம்:

1. குறுந்தொகை உரைகளின் தோற்றமும் வளர்ச்சியும்                          
2. தி.சௌ. அரங்கனார் உரைநெறிகள்              
3. உ.வே.சா. உரைநெறிகள்                         
4. ரா. இராகவையங்கார் உரைநெறிகள்             
5. உரைகள் ஒப்பீடும் மதிப்பீடும்                          
  துணைநூற்பட்டியல்                             
  மேலாய்வுக் களங்கள்                           
பின்னிணைப்பு - 1 (தி.சௌ.அ. பதிப்புக்கு   உதவிய கொடையாளர் பட்டியல்)                 பின்னிணைப்பு - 2 (  குறுந்தொகைப் பதிப்பு அட்டவணை)                                   பின்னிணைப்பு - 3   (தி.சௌ.அ. பதிப்பு (1915) முகப்பு)                             
பின்னிணைப்பு - 4 ( உ.வே.சா. பதிப்பு (1937) முகப்பு)                                      பின்னிணைப்பு - 5  (குறுந்தொகைத் துறைசொல் விளக்க அகராதி)                    பின்னிணைப்பு - 6   (ரா.இரா.புதிய பாடங்கொண்ட இடங்கள்)                        
பின்னிணைப்பு - 7 (குறுந்தொகை உரைநெறிகள் வகைப்பாட்டு அட்டவணை)          
பின்னிணைப்பு - 8 (உரைமேற்கோட் பாடல்கள்)   
பின்னிணைப்பு - 9 (தி.சௌ.அ. சுட்டியுள்ள பாடவேறுபாடுகள்)

ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள்  (பக்கம்: 160. விலை:ரூ.150)  – உள்ளடக்கம்:                  
1.      தொல்காப்பிய - சங்க - அறத்தொடு நிற்றல் மரபுகள்    
2.     உரையாசிரியர்கள் பார்வையில் சாரியைகள்
3.     சங்க இலக்கியக் கைக்கிளை மரபுகள்     
4.     ஒன்றால் வென்ற சேயிழையர்     
5.     குறுந்தொகை விழுமியங்கள்
6.     வேம்பா? வேங்கையா?
7.     இலக்கண, இலக்கிய உரைகளில் திருக்குறள்       

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

பல்துறைநோக்கில் தொல்காப்பியம் இரு தொகுதிகள் - அறிமுகம்

தமிழன்னை ஆய்வகம் இவ்வாண்டில் வெளியிட்டுள்ள பல்துறைநோக்கில் தொல்காப்பியம் - தொகுதி 1, தொகுதி - 2 ஆகிய நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும். முதல் தொகுதி 440 பக்கங்கள் கொண்டது. விலை ரூ. 350. இரண்டாம் தொகுதி 312 பக்கங்கள். விலை ரூ. 300. தொல்காப்பியத்தைப் பல்துறைநோக்கில் அணுகிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்களின் கட்டுரைத் தொகுப்பு நூல்கள் இவை. நூல்களின் முகப்புப் பக்கங்கள்.

 பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி - 1 - முகப்பட்டை.
 பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி - 1 - பின்னட்டை.
 பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி - 2 - முகப்பட்டை.
பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி - 2 - பின்னட்டை.
 

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள் - புதிய வெளியீடு

  எமது பதிப்பகத்தின் மற்றுமொரு புதிய வெளியீடாக ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள் என்ற நூல் மலர்ந்துள்ளது. பக்கம்: 176. விலை: ரூ.150. தமிழ்ச்செவ்வியல் நூல்களில் பொதிந்து கிடக்கும் அரிய தகவல்களை புதிய நோக்கில் வெளிப்படுத்தும் நூல். வாங்கிப் பயன்கொள்க. நூலின் முகப்புப் பக்கம் இது.



ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

குறுந்தொகை உரைநெறிகள் - மதிப்புரை

   எமது வெளியீடாகிய குறுந்தொகை உரைநெறிகள் நூல் அறிமுக மதிப்புரை தனித்தமிழ் இயக்கத்தின் திங்களிதழாகிய வெல்லும் தூய தமிழ் இதழில் வெளிவந்துள்ளது. இதழாசிரியர் அவர்களுக்கும், சிறப்பாசிரியர் முனைவர் தமிழமல்லன் அவர்களுக்கும் எம் நன்றி. அறிமுக மதிப்புரை இதோ:


செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள் - மதிப்புரை

      எமது வெளியீடாகிய செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள் நூலின் மதிப்புரை பன்னாட்டுக் காலாண்டு இதழாகிய அரிமா நோக்கு இதழில் வெளிவந்துள்ளது. மதிப்புரை எழுதியோருக்கும் இதழாசிரியர் அவர்களுக்கும், பேராசிரியர் ஜெயதேவன் அவர்களுக்கும் எம் நன்றி. மதிப்புரை இதோ:






புதன், 15 ஜூன், 2011

பேராசிரியர் முல்லை ஆதவன் அவர்களின் மதிப்பீடு



      பேராசிரியர் முல்லை ஆதவன் ஐயா அவர்களுக்கு என்னுடைய நூலாகிய குறுந்தொகை உரைநெறிகள் பற்றிய வலைப்பக்கத்தின் குறிப்பினை அனுப்பியிருந்தேன். அவருடைய மதிப்பீட்டுக் கருத்துரை இது.


       என் மதிப்பிற்குரிய நண்பர் மணி, வணக்கம் . வாழ்த்துக்கள்

      அமெரிக்காவிலிருந்து அண்மையில் திரும்பி வந்தேன். வந்தவுடனே தங்கள் நூல் வெளியீடு பற்றிய தகவல் என்னை வரவேற்றது. மிக மகிழ்ச்சி நண்பரே.

        தங்கள் குறுந்தொகை உரை நெறிகள் நூல் வடிவில் தமிழ் ஆர்வலர் அனைவரும் பயன் பெறும் வகையில் வெளி வந்திருப்பது மிக மகிழ்ச்சி தருகிறது.சங்க இலக்கியத்தில் உள்ளார்ந்த புலமையும் அறிவார்ந்த நேரிய ஆய்வுநோக்கும் செயற்பாடும் கொண்டு இயங்ககிக்கொண்டிருக்கும் உங்கள் மீது எனக்கு மிக நம்பிக்கை உள்ளது. எதிர்காலத்தில் தமிழுக்கு வளம் சேர்க்கும் தரமான ஆய்வாளர்களாக என்னால் அடையாளம் காணப்படும் மிகச்சிலரில் நீங்கள் குறிப்பிடத் தக்கவர். நீங்கள், என் கெழுதகை நண்பர் முனைவர் இ.கி.இராமசாமி அவர்களின் மாணவர் என்பதால் இதில் வியப்பு ஏதும் இல்லை. மிக மகிழ்ச்சியுடன் உங்கள் நூலை வரவேற்கிறேன். தமிழிலக்கிய- குறிப்பாக, சங்க இலக்கிய ஆய்வுக்கு- இந்த நூல் ஒரு மிகச் சிறந்த கொடை. தங்கள் ஆய்வுப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

சனி, 4 ஜூன், 2011

புதிய வெளியீடு - குறுந்தொகை உரைநெறிகள்

           முனைவர் ஆ.மணி எழுதிய குறுந்தொகை உரைநெறிகள் என்னும் நூல் தமிழன்னை ஆய்வகத்தின் புதிய வெளியீடாக மலர்ந்துள்ளது. 1915 ஆம் ஆண்டுமுதல் 2010 ஆம் ஆண்டுவரை குறுந்தொகைக்கு வெளிவந்துள்ள உரைகளின் எண்ணிக்கை 19. இவ்வுரைகள் அனைத்தையும் ஆராய்ந்துள்ள முதல்நூல் இது. தமிழில் இவ்வகையிலான ஆய்வுகள் இதுவரை நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'தமிழ்மொழி செம்மொழி' எனத் தகுதிச் சான்றுரை வழங்கிய உலகப்பேரறிஞர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களால் " இனி, செய்யப்படும் சங்க இலக்கிய ஆராய்ச்சிகளுக்கெல்லாம் வழிகாட்டியாக அமையும் நூல்"  எனப் பாராட்டப்பட மிகச்சிறந்த நூல். நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்க.


       நூற்குறிப்பு: தெம்மி அளவு. 304 பக்கங்கள். விலை: ரூ. 300.,
ISBN:  978- 81910738- 1 -2.