பாரிசு செர்போன் பல்கலைக் கழகத்தில் ஆங்கில முதுகலைப் பட்டமும், புதுவைப் பல்கலைக் கழகத்தில் பிரெஞ்சு மொழியில் முனைவர்ப் பட்டமும் பெற்ற திருமதி லூர்து திருவாஞ்சியம் - லூயி அவர்கள் பிரெஞ்சு மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஆற்றிய பணிகளைப் பாராட்டிப் பிரான்சு அரசு இவருக்குச் செவாலியே பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. இத்தகைய பெருமைக்குரிய இவர்கள் புதுச்சேரியின் மரபாகத் திகழும் சமையல் செமுறைகளைப் பதிவு செய்வதிலும், சமையல் கலையிலும் வல்லவர். அவருடைய ஈடுபாட்டின் பயனாக இந்நூல் வெளிவருகின்றது.
நூலின் முன்னட்டை
பின்னட்டை