நகர்வெழுத்து

செம்மொழி இலக்கிய, இலக்கண நூல்களின் ஆய்வகம், உலகப் பேரறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்ற நூல்களின் பதிப்பகம்
output:
மதிப்பீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதிப்பீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 ஜூன், 2020

குறுந்தொகை ஆய்வுகள்: செய்தனவும் செய்ய வேண்டியனவும் - இணையவழிச் சிறப்புரை


குறுந்தொகை ஆய்வுகள்: செய்தனவும் செய்ய வேண்டியனவும்
இணையவழிச் சிறப்புரை

  இனம் – பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் “குறுந்தொகை ஆய்வுகள்: செய்தனவும் செய்ய வேண்டியனவும்” என்னும் தலைப்பில் நேற்று (20.06.2020) சனிக்கிழமையன்று பிற்பகல் 05.30 முதல் 06.30 வரை உரை நிகழ்த்தும் வாய்ப்பு அமைந்தது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் முதலான நிறுவனங்களின் நிதிநல்கையில் நடத்தப்பட்ட கருத்தரங்கு / பயிலரங்குகளில் இதுகாறும் 70க்கும் மேற்பட்டவற்றில் உரையாற்றியுள்ளபோதிலும், கொரோனா – தீ நுண்மியால் விளைந்துள்ள இக்கொடுஞ்சூழலால் முதன்முறையாக இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றும் சூழல் அமைந்தது.
 கூகுள் சந்திப்பு – குறுஞ்செயலியில் நிகழ்ந்த அக்கருத்தரங்கை ஒருங்கிணைத்த இனம் இதழின் பதிப்பாசிரியர்கள் முனைவர் முனீஸ்மூர்த்தி, முனைவர் சத்யராஜ் ஆகியோருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். கருத்தரங்கில் பங்கேற்றுக் கருத்துரை வழங்கிய பெருமக்களுக்கு நன்றிமலர்கள். இனம் வலைக்காட்சியிலும் பகிரப்பட்டுள்ள உரைநிகழ்வு இதோ: 




நிகழ்ச்சி அழைப்பிதழ் இதோ:





புதன், 15 ஜூன், 2011

பேராசிரியர் முல்லை ஆதவன் அவர்களின் மதிப்பீடு



      பேராசிரியர் முல்லை ஆதவன் ஐயா அவர்களுக்கு என்னுடைய நூலாகிய குறுந்தொகை உரைநெறிகள் பற்றிய வலைப்பக்கத்தின் குறிப்பினை அனுப்பியிருந்தேன். அவருடைய மதிப்பீட்டுக் கருத்துரை இது.


       என் மதிப்பிற்குரிய நண்பர் மணி, வணக்கம் . வாழ்த்துக்கள்

      அமெரிக்காவிலிருந்து அண்மையில் திரும்பி வந்தேன். வந்தவுடனே தங்கள் நூல் வெளியீடு பற்றிய தகவல் என்னை வரவேற்றது. மிக மகிழ்ச்சி நண்பரே.

        தங்கள் குறுந்தொகை உரை நெறிகள் நூல் வடிவில் தமிழ் ஆர்வலர் அனைவரும் பயன் பெறும் வகையில் வெளி வந்திருப்பது மிக மகிழ்ச்சி தருகிறது.சங்க இலக்கியத்தில் உள்ளார்ந்த புலமையும் அறிவார்ந்த நேரிய ஆய்வுநோக்கும் செயற்பாடும் கொண்டு இயங்ககிக்கொண்டிருக்கும் உங்கள் மீது எனக்கு மிக நம்பிக்கை உள்ளது. எதிர்காலத்தில் தமிழுக்கு வளம் சேர்க்கும் தரமான ஆய்வாளர்களாக என்னால் அடையாளம் காணப்படும் மிகச்சிலரில் நீங்கள் குறிப்பிடத் தக்கவர். நீங்கள், என் கெழுதகை நண்பர் முனைவர் இ.கி.இராமசாமி அவர்களின் மாணவர் என்பதால் இதில் வியப்பு ஏதும் இல்லை. மிக மகிழ்ச்சியுடன் உங்கள் நூலை வரவேற்கிறேன். தமிழிலக்கிய- குறிப்பாக, சங்க இலக்கிய ஆய்வுக்கு- இந்த நூல் ஒரு மிகச் சிறந்த கொடை. தங்கள் ஆய்வுப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.